அவள்

அவள்
பலமொழியில்
புது மொழி ! பலருக்கும்
புரியாத மொழி !

அவள்
காதலும் இடையும்
இருக்கிறதா ? இல்லையா ? என்பது
சந்தேகத்தின் உச்சம் !

அவள்
உதட்டின் மௌனம்
பார்வை மொழியால் உடையும் !

அவள்
இன்பத்தின் எல்லை
எனக்கில்லை தொல்லை !

அவள்
பனி பிரதேச
குளிர் காற்று ! வீசாமலே
குளிர் ! வீசினால் .....!


சரோ

எழுதியவர் : சரோ (9-Dec-13, 1:11 pm)
Tanglish : aval
பார்வை : 109

மேலே