பாரதி

எட்டய புரத்தில் பிறந்தவனாம்
எல்லோர் மனத்திலும் நிறைந்தவனாம்,
எட்டாப் புகழைப் பெற்றவனாம்
ஏறெனப் புரட்சி செய்தவனாம்,
தட்டி உணர்வைத் தந்தவனாம்
தாயகம் காத்திட நின்றவனாம்,
பட்டெனப் பாக்களைப் படைத்தவனாம்
பண்புளம் கொண்ட பாரதியாம்...!

அந்நியன் அஞ்சிட நின்றவனாம்
ஆயிரம் சாதிகள் வெறுத்தவனாம்,
தந்நிலம் காக்கத் துணிந்தவனாம்
தண்தமிழ் போற்றிடும் பெருமகனாம்,
மன்னரில் உயர்ந்த மாகவியாம்
மாத்தமிழ்த் தொன்மை உணர்ந்தவனாம்,
கன்னித் தமிழின் காவலனாம்
கவியாம் அமரன் பாரதியே...!

(15-10-1969ல் என் மாணவப் பருவத்தில் எழுதியது..
கண்டெடுத்து முதன்முறையாக வெளியிடப்படுகிறது)

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Dec-13, 10:38 pm)
பார்வை : 154

மேலே