வளர் பிறை -14

தினகரனை பார்க்க தனியே சென்றாள் ஜோதி,,,,,, மனம் எரிமலை போல குமுறிக்கொண்டிருந்தது ,,

இயல்பாக உள்ளே நுழைந்தாள்,,,,,

"மே ஐ கம் இன் சார்"

"எஸ் கம் இன்"

"நோட் சார்" - நீட்டினாள்

"முடிச்சிட்டியா??"

"இனி தான் முடிக்கணும்"- அவள் பேசும் தோரணை மாறியது,,, அதாவது ஜோதி ஜெனியாக மாறினாள்,,, பேச்சில்

"சரி முடிச்ச வரைக்கும் காட்டு"

தனது ஏட்டை நீட்டினாள்,,, அவன் வாங்கி கொண்டான்

"ஏன் இவ்வளோ லேட்"

"இன்னைக்கு தான் முடிக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு "

அவன் ஒவ்வொரு பக்கமாக திருப்பி திருத்த ஆரம்பித்தான்,,,

இரண்டு,,,, மூன்று பக்கங்கள் திருத்தி இருப்பான்,,, அவன் பேனா எழுத மறுத்தது,,,, வெறும் காகிதத்தில் கிறுக்கி பார்த்தான் எழுதியது,,, அவன் ஏட்டில் எழுதினான் எழுத வில்லை

"என்ன இது"- குழம்பினான்

"என்ன சார் பேனா எழுத மாட்டுதா"- கிண்டலான தொனியில் கோபம் கலந்து கேட்டாள் ஜோதி

அவளின் பேச்சு மற்றும் குரலில் மாறுதல் தெரியவே திடுக்குற்றான் தினகரன்

"ஆ ஆ ஆமா"

"ம்ம்ம் நான் வேணும்னா இன்க் போட்டு தரவா??"- கேட்டாள் ஜோதி

",,,,,,,,,,,,,,,,,,,,,"- மௌனமாக இருந்தான் தினகரன்


"பயப்படாதீங்க சார் இங்க யாருமே இல்ல,,,,,"

அவளின் பேச்சு தினகரனுக்கு குழப்பமாக இருந்தது,,,,,,,


"என்ன சார் கதவ சாத்திடட்டுமா,,,, உங்க பயம் தெளிய"- சொல்லி விட்டு சிரித்தாள்,,,, அவளின் சிரிப்பொலி மிக பயங்கரமாகா ஆவேசமாக இருந்தது

"நீ,,,, நீ,,,, நீ யாரு யாரு??"- பயத்தோடு கேட்டான் தினகரன்


"நானா ,,,,,,, ஜெனி"- உரக்க சொன்னாள் ஜோதி

"ஜெனி,,,,னி ஜெனியா,,,,,,"- தினகரனின் பயம் உச்சத்திற்கு போனது

"ம்ம்ம்ம்ம் ஆமான் டா ஜெனி தான்,,,,,,, உன்னால அந்நியாயமா செத்து போன ஜெனி தான்"- ஆவேசமாக சொன்னாள்

அவளின் சிரிபொலியில் அந்த இடமே குலுங்கியது ,,,,,, காற்றின் வேகம் அங்கிருந்த கோப்புகளெல்லாம் பறந்தது

நிலை தடுமாறினான் தினகரன்,,,,,,,, ஓட எத்தனித்தான் ,,,,,,,,,

அவன் கதவுகளிடம் நெருங்கிய சமயம் கதவுகள் தானே மூடிக்கொண்டன

"என்னை விட்டுட்டு என்னை விட்டுட்டு,,,,,,"அலறினான் தினகரன்

"அன்னைக்கு நான் உன்கிட்ட இதே மாதிரி தான் கெஞ்சினேன் ஆனா நீ எனக்கு இரக்கம் காட்டல இப்போ நானும் உனக்கு இரக்கம் காட்ட போறதில்லை"- சொல்லி விட்டு சிரித்தாள்

ஜோதி(ஜெனி)யின் சிரிப்பொலி தொடர்ந்தது,,,,,,,,, தொடர்ந்தது


சில மணி நேரத்திற்கு பின்,,,,,,,,,

ஜோதி அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்,,,,,, அவள் ஆவேசம் தனியவே வீட்டிற்கு சென்றாள்

இப்போது ஜோதியை இரு விழிகள் கவனித்து கொண்டிருந்தது

அதை அவள் அறியவில்லை,,,,,,,


(வளரும்,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (13-Dec-13, 5:03 pm)
பார்வை : 191

மேலே