டூப் டூப் – ஒரு பக்க கதை
ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான்
”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?”
-
இல்லை, அமர், டூப்பை வச்சு பண்ணிடுங்க, என்றவாறே
கேரவனுக்குள் சென்றான் பிரேம்குமார்.
-
டைரக்டர், தன் உதவியாளரிடம் கூறினான், ‘இவன் ஒரு
காலத்தில் ஃபைட்டரா கூலிக்கு மாரடிச்சவன்தான், இப்ப ஒரு
சின்ன பைக் ஜம்புக்கு இவனுக்கு டூப் போட வேண்டியிருக்கு’
என்று அலுத்துக் கொண்டான் அமர்.
-
கேரவனிலிருந்து வந்து டச்சப் செய்து கொண்டிருந்த
பிரேம்குராரிடம் அஸிஸ்டென்ட் டைரக்டர் கணேஷ்
கேட்டான்.
-
”சார் ஒரு சின்ன பைக் ஜம்புக்கு டூப் போடச் சொன்னதுக்கு
டைரக்டர் உங்க மேல ஆதங்கப்பட்டார். நீங்க நல்லா
அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற கேரக்டர். நீங்க டூப் போடச்
சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்குமே?
-
கணேஷ், ஒரு காலத்திலே நானும் ஃபைட்டரா டூப்
போட்டவன்தான். ஒரு தடவை பைக் ஹம்ப் பண்ணினா எனக்கு
ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்ப அதை நான் பண்ணினா ஒரு
டூப் போடற ஸ்டண்ட் நடிகரோட வயிற்றிலே அடிச்ச மாதிரி ஆயிடும்..!
அதனால்தான் நான் முடியாதுன்னேன்! நான் செஞ்சது சரிதானே?
-
நூறுசதவீதம் சரி சார்! என்று சந்தோஷப்பட்டான் கணேஷ்
-
—————————–
>வி.சகிதாமுருகன்
நன்றி: குமுதம