வாழ்க்கை

வாழ்க்கைப் பயணம் என்பது
கரடுமுரடான கற்களும்
குத்திக் கிழிக்கும் முற்களும்
பசுமை நிறைந்த புற்களும்
நிறைந்தது தான்!

கரடுமுரடான கற்கள்
தடுக்கி விழுகையில்,
எழ கைகொடுக்காமல்
உதவியில்லாமல் எழுவதை
உணர்த்தியவள் - என் தாய்

குத்திக் கிழிக்கும் முற்களால்
உடல் வதைத்தாலும்
பாதை மாறாமல் சென்று
என் வாழ்க்கை பயணத்தை
சொன்னவள் - என் தோழி

பசுமை நிறைந்த புற்களில்
மட்டும் விளையாடி
வெற்றிக் கனியை மட்டும்
சுவைப்பவள் - காதலி

இந்த மூன்றிலுமே பங்கேற்கும்
இறுதிவரை உடனிருந்து போராடும்
என் வாழ்வை ஒளி மயமாக்கும்
இன்னொரு தாயாக
வருபவள் - மனைவி.

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (15-Dec-13, 2:43 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 69

மேலே