அடித்தட்டு மக்களே என் கணக்கை கொஞ்சம் கவனியுங்கள்

எனக்கு
உரிமைகள்
கொடுத்தார்கள். . .

அதுவும்
இலவச உரிமைகள்
இரண்டு
கொடுத்தார்கள்!

இரண்டுமே
என் வருமானத்திற்க்கு
மேல் இருந்தது!

ஒன்று
லஞ்சம் கொடுப்பது!
மற்றொன்று
லஞ்சம் வாங்குவது!

லஞ்சம் கொடுக்கும் போது
அரசு அலுவலகத்தில்
நிற்கிறேன். . . . !!!

லஞ்சம் வாங்கும் போது
வாக்குப்பெட்டியின்
அருகில் நிற்கிறேன். . . .!!!

கொடுத்த இலஞ்சமும்
வருமானத்திற்க்கு
மேல் இருந்தது. . . .!!!

வாங்கிய இலஞ்சமும்
வருமானத்திற்க்கு
மேல் இருந்தது. . . . .!!!

கூட்டிக்கழித்து பார்த்தால்
இடது கையில்
வாங்கிய இலஞ்சம்
வலது கையில்
போய்விடுகிறது. . . !!!

முடிவு:
ஓட்டு கேட்டு வந்தவனுக்கு
இலாபம். . . !!!
ஓட்டு போட்ட எனக்கு
நஷ்டம். . . . !!!

எழுதியவர் : அடித்தட்டு ஏமாளி (15-Dec-13, 6:35 pm)
பார்வை : 92

மேலே