என்னோடு வா
என்னை பெத்தெடுக்க
மறு பிறவி நீ எடுத்தியே !!!
என் உள்ளங்கையில்
உன் உலகையே உள்ளடக்கி வெச்சியே !!!
என்னோட கண்ண பார்த்தே
உன்னோட கனவெல்லாம் கண்டு ரசிச்சியே !!!
நா சிரிச்சி விளையாட
அகிலத்தையே மறந்து நின்னியே!!!
முதல் அடி நான் நடக்க
தலைநிமிர்ந்து நீ நடந்தியே!!!
நான் பசி மறக்க
நிலாவையே சிறை பிடிச்சியே !!!
ஆசையை அள்ளி கொடுத்த ....
கனவெல்லாம் கையில் தந்த....
பாசத்த கொட்டி வளர்த்த ....
கவலையெல்லாம் கிள்ளி போட்ட ....
அட்சதய அள்ளி போட்ட .....
வரதட்சனையா என்னையும் சேர்த்து கொடுத்த....
மருமகளாய் நான் போவதேனோ !!!!!
மறுதாயாய் நீ வர மறுப்பதேனோ!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
