===+++உண்மையாக வாழ்வோம்+++===

அச்சம் கொண்டு அடங்காதே
+++அவலம் கண்டு ஒதுங்காதே!
துச்சம் கண்டு துவளாதே
+++துணிந்து நிற்கத் தவறாதே!

நரிகள் நட்பை நாடாதே
+++நன்றி மறக்கக் கூடாதே!
நரகர் உறவை போற்றாதே
+++நஞ்சை சொல்லாய் ஊற்றாதே!

கள்ளத் தனங்கள் செய்யாதே
+++கற்பு ஒழுக்கம் பொய்யாதே!
காமக் கணைகள் தொடுக்காதே
+++கன்னியம் கெட்டு நடக்காதே!

ஊரை ஏய்த்து வாழாதே
+++உன்மையைக் கொன்று போடாதே!
ஊழல் ஆக்க இசையாதே
+++உரிமை மீட்க தவறாதே!

வேம்பாய் விடமாய் இருக்காதே
+++வேற்றுமை வளர்க்க நினைக்காதே!
வீணாய் அலைந்தே திரியாதே
+++வீரம் இன்றிப் கரியாதே!

சூது சூழ்ச்சி புனையாதே
+++சும்மாக் கிடந்தே சாகாதே!
சூழ்ந்த இருட்டில் தொலையாதே
+++சூரியன் உதிக்கும் பதறாதே!

பாவம் புரிந்து பிழைக்காதே
+++பாசம் கொன்று புதைக்காதே!
பணத்துக் காக நடிக்காதே
+++பதவிக் காக ஒடியாதே!

சுகத்துக் காக திருடாதே
+++சோம்பே றிக்கு வருடாதே!
அழுது அழுது உருகாதே
+++அடித்தால் கூட உடையாதே!

உழைப்பு உறுதி ஒழுக்கமொடு
+++தன்னைத் தானே நம்பிவிடு - பூமியின்
உச்சியில் கால் வைத்து
+++முடியும் உன்னால் புரட்டிவிடு...!!!

------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (17-Dec-13, 1:17 pm)
பார்வை : 124

மேலே