பஞ்சான என்நெஞ்சம்

என்
காதல் மூடி
காசு தேடி
கடல் கடந்து
வந்துவிட்டேன்...!!!

பஞ்சான
என்நெஞ்சம்
அங்கேயே கிடக்கிறந்து
பறக்கமுடியாமல்,
விழுந்தது
உன் கால்தடத்தில்
என்றபடியால்....!!!

நீ
தூங்குகிறாய்
உன் நினைவுகள்
என் தூக்கத்தை
கலைத்துவிட்டு
கற்பனையோடு
சண்டையிடுகின்றன,
உனைப்பற்றி
கவிதை எழுதச்சொல்லி....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (17-Dec-13, 2:17 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 372

மேலே