டிக்கட் டிக்கட்

கண்டக்டர் ; டிக்கட் டிக்கட்

பயணி;இந்தாங்க டிக்கட் கொடுங்க ..

கண்டக்டர்; இந்தாங்க ..

பயணி; குர்ர்ர்ர்ர்ர்

கண்டக்டர்;விசிலடித்து ..நாமக்கல் இறங்குறவங்க இறங்குங்க

பயணி;குர்ர்ர்ர்ர்

கண்டக்டர்; இவரு எங்க போகணும்? இப்டி தூங்குறார்? ...
சேலம் வந்துடுச்சு எல்லோரும் இறங்குங்க

பயணி; திடுக்கிட்டு...என்னாதூ சேலமா?
யோவ்..?நா கரூருக்கு போகணும் கரூர்ல இறக்கிவிடுய்யா?

கண்டக்டர்;என்னது? கரூருக்கா?விடிஞ்சாபுலதான் ...

இது சேலம் பஸ் ...நீ இதுல ஏறினா சேலத் துலதான் விடுவேன் கரூர்லையா விடுவேன் இது ஓட்டுனர் ..

பயணி; நா நல்ல பார்த்துதான்யா ஏறினேன்
நீ தான் போர்ட மாத்திட்ட?

கண்டக்டர்; சரியாப் போச்சு ...நீ துங்கும்போதே நினைச்சேன்... நீ தூக்கத்துல எந்த பஸ்னு தெரியாம ஏறிட்டு எங்கள சொல்ற...

பயணி; சரி சரி காசு கொடுய்யா?

கண்டக்டர்; என்னாது காசா..?அதெல்லாம் கிடையாது நீ எந்த பஸ்னு பார்க்கம ஏறிட்டு ..அதெல்லாம் கிடையாது போ...கரூர் பஸ் பிடிச்சுப் போ

பயணி ;நல்ல வந்தேன்... கல்யாணமே முடிஞ்சிருக்கும்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (18-Dec-13, 6:03 am)
Tanglish : tikkat tikkat
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே