பெண்

அணுக்கருவில் உருவான உலகத்தில், உன்
உயிர்க்கருவில் உயிர்ப்பித்தவளே!
எங்கள் முதல் அழுகைக்கும் சிரிப்புக்கும்
அரங்கேற்றம் தந்தவளே !

உன்னை அடக்கிப் பார்க்க நினைத்த போதெல்லாம்
உன் அன்பாலேயே அடக்கி வைத்தாய்!
உன்னை போற்றி பாட வருடத்தில் ஏனோ
ஒரு நாள் மட்டுமே விட்டு வைத்தாய் !!

அறிவு எப்போதும் உலகத்தை தேடுகிறது ! ஆனால்,
இந்த உலகமே உன்னைத் தான் தேடுகிறது!!
என்றென்றும் நன்றிகள் சொல்வோம்,
உன் அன்பின் கடனாளிகளாக !!

எழுதியவர் : அகமுகன் விஜய் (18-Dec-13, 1:43 pm)
Tanglish : pen
பார்வை : 152

மேலே