நண்பனே

நம் ஆழ்ந்த நட்பின்
ஒவ்வொரு சந்திப்பின்
இறுதி மணிதிலியங்களில்
உதிர்ந்து விடுகிறது வயதும்
பூத்து கொள்கிறது பழைய
ஞாபகத்தின் மிச்சங்களும்
நமக்கான பாதைகள்
அதிலே நம் இருவரின் கால்கள்
உரசி கொள்ளும் தோள்கள்
திமிராய் நான்
துணையாய் நீ
நண்பனே
என் விரல் பிடித்து
உன் விரல் கோர்த்து நடக்கையில்
இவ்வுலமே நம்முள்ளே
என் உயிரோ உன் விரல் நுனியுள்ளே
நடுங்கம் கரங்களை கொஞ்சம் பற்றிகொள்
இதமாய் அணைத்து கொள்
மெல்லியதாய் முத்தமிடு
இப்படியே இறந்து விடுகிறேன்
அணைத்த உன் மார்போரமாய்.......

எழுதியவர் : யுவ ராஜா (22-Dec-13, 7:55 am)
Tanglish : nanbane
பார்வை : 162

மேலே