வளர் பிறை-24

"imposible எப்படி ரவி அந்த பொண்ணு தான் செத்து போயிட்டாளே அப்புறம் எப்படி பாத்த அவளை "- அதிர்ச்சி கலையாமல் கேட்டான் கணேஷ்

"அது தான் கணேஷ் எனக்கும் கொழப்பமா இருக்கு"

"சரி இப்ப என்ன பண்ணலாம்"

"நான் அந்த வாட்ச்மேனை இன்னைக்கு ஈவ்னிங் அவன் எடத்துக்கு வர சொல்லிருக்கேன்,,,,,,, நீயும் நானும்,,, இன்னைக்கு அங்க போறோம்,,, அந்த எடத்துல தான் தினகரனையும், செல்வத்தையும் அடைச்சி வச்சிருகாங்கலாம்.,,,, நாம அங்க போய்,,, அவங்க எல்லாரையும் போட்டு தள்ளிட்டு, தினகரனையும், செல்வத்தையும் இங்க கொண்டு வரணும்"

"சரி ரவி,,,,, உன் தம்பிய என்ன பண்றது"

"அவனையும் கொன்னுடனும் அவன் இருந்தா எனக்கு தான் ஆபத்து,,, அது தவிர அவன் மேல உயிரையே வச்சிருக்க அப்பாவுக்கு நான் குடுக்க போற முதல் அடி இது"


"அப்போ உன் சொத்து,,,, "

"அதுக்கு தானே இந்த டாகுமென்ட்,,, இதுல எனக்கு இந்த சொத்து வேண்டான்னு ரகு சொல்ற மாதிரி டைப் பண்ணி வச்சிருக்கேன்"


"சொத்து உன் கைக்கு வந்துடும்,,,,,,,,, இவன் செத்தா போலீஸ் உன்ன தான முதல சந்தேகப்படும் "

"போலீஸ் க்கு சந்தேகம் வராத மாதிரி தான் இவன கொல்ல போறேன் இவன போஸ்ட் மார்டம் பண்ணுனா கூட கொலைன்னு தெரியாத அளவுக்கு இவன கொல்ல என்கிட்டே ஒரு ஐடியா இருக்கு"


"என்ன டா அது"

"இது இது தான்"- அவன் பையிலிருந்து ஒரு பொருளை எடுத்து காட்டினான்

"என்ன டா வெறும் சிரிஞ்சி"

"ஆமா இந்த வெறும் சிரிஞ்சிய அவன் உடம்பு நரம்புல செலுத்துனா,,,, அந்த இரத்த ஓட்டத்துல ஒரு காற்று குமிழ் உருவாகும் அது அவன் இரத்த ஒட்டத்த தடுத்து "ஹார்ட் அட்டாக்" வரவைக்கும்"

அவன் சொல்லி முடித்ததும் ரவியை ஒரு பயம் கலந்த பார்வை பார்த்தான் கணேஷ்

"இவன் யாரையும் கொல்ல தயங்க மாட்டான்"- அவன் மனம் சொல்லியது,,,


"சரி சாயங்காலம் ரெடி இரு,,,, அவன் எப்புடியும் கொஞ்சம் இருட்டுனதுக்கு அப்புறம் தான் வருவான்னு நெனைக்கிறேன்,,, எந்த நேரம்னாலும் பரவா இல்ல,,,,,,, இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்"


"சரி டா "- பயத்தோடு பதிலளித்தான்


இவர்கள் பேசி கொண்டிருக்க சூரியன் மெல்ல மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தான்

மாலை நேரம்,,,, சூரியனின் பிரவேசம் முடிந்து நிலவின் வருகைக்காக கருண்ட வானம் காத்திருந்தது,,,,,,,,,,,,


பௌர்ணமி நிலவு மெல்ல தன முகம் காட்ட,,,,

உடலெங்கும் வேதனையுடன்,,,,,,,,,,, அலறிக் கொண்டிருந்தாள் ஜோதி

"ஐயோ,,,,,,,, எரியுதே,,,,,,,, எரியுதே,,,,,,, ஆ,,,,, அப்பா எரியுது அப்பா என்னக்கு உடம்பு எரியுது அப்பா"

ஜோதியில் துயரை கண்டு அவள் அம்மா மனம் நொந்து கொண்டிருந்தாள்,,, குணசேகரனுக்கோ என்ன செய்வதென்றே புரிய வில்லை


சில நாட்களாக நிலவின் பிரவேசத்தில் ஜோதி இவ்வாறாக துடிக்க ஆரம்பித்து விட்டாள்,,,,,, இரவில் வரும் இந்த எரிச்சல் பகலில் இடம் தெரியாமல் போய் விடுகிறது

இது எதோ மாந்திரிக வேலை என ஜோதியின் அம்மா ஒரு பூசாரியை பார்க்க சென்றார்


மறுபுறம், ரகுவை(ரவி) தேடி குணசேகரன் புறப்பட தயாரானார்

(வளரும் ,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (25-Dec-13, 3:29 pm)
பார்வை : 144

மேலே