உனக்கு எழுதும் கவிதைகள்
[பகுதி 5]
நான் உணவருந்தும்போது
பரிமாறுவதற்காக
என்னருகில் நிற்கிறாய்
நீ பரிமாறிக் கொண்டே
இருப்பதற்காக
நான் உணவருந்திக்கொண்டே
இருக்கிறேன்
பசியாறியும்
முடியாமலும் !
[16]
***********
அறுசுவைகளில்
படைத்த உணவு
எதை உண்டாலும்
எனக்கு
இனிப்பாகவே
இருக்கிறது
நீ பரிமாறுவதால் !
[17]
**********
உன் வீட்டு விருந்திற்கு
வந்தவன்
உண்ணாமலே
பசியாறிச் செல்கிறேன்
உன்னைப் பார்த்த
மகிழ்வில் !
[18]
**********
உன்னிடமிருந்து
விடைபெறும்பொழுது
மலர்ந்த விழிகளால்
கவர்ந்து
மென்மையாய்
ஒரு புன்னகை
மலரைத் தூவி
வழியனுப்பினாய்
பூவிலிருந்து
தேனருந்தி வெளியேறும்
வண்டுபோல் பறந்தேன்
வழியெங்கும்
மகரந்தங்களை
இறைத்தபடி
எனக்குள் உன்னைச்
சுமந்தபடி !
[19]
***********
கவிதைகள் தொடரும்....