எப்ப நீ வருவ
போதுமடி போதுமடி ஒன் ஒத்த பார்வை போதுமடி
செத்துப்போவேன் செத்துப்போவேன் ரொம்ப நேரம் பார்த்தாலே...
கண்ணு என்ன கண்ணு அது
என் கண்ண பறிக்கும் மின்னல் அது...
வார்த்தை ஒன்னு சீக்கிரமா சொல்லு
ஒன் மௌனம் என்ன மெல்ல கொல்லும்...
வாங்கி வந்த ரோஜா மொட்டு
அது வாடும் முன்னே தலையில் சூடு...
நேற்றுவரை நான் ஒத்த மரம்
சீக்கிரமாய் தந்து விடு ஒரு காதல் வரம்..
அப்பன் ஆத்தா சொந்தம் உனக்கு
கூட ஒரு அத்த மாமா பந்தமும் தாரேன்...
என் மனசு முழுதும் நீதானடி
என்ன வேணும் சொல்லு கண்மணி...
தேதி சொல்லும் நாளும் பக்கத்தில
பதில் மட்டும் இன்னும் வெக்கத்தில..
ஊரும் சனம் கூடி வாழ்த்து சொல்ல
எங்க வீட்டு மகாலட்சுமி எப்ப நீ வருவா...
வங்கி வச்ச பட்டு சேலை...
அதுக்கு உருவம் கொடுக்க வாடி புள்ள..
எனக்கேத்த பொண்டாட்டி நீதானடி
சீக்கிரமா வந்து விளக்கேத்தடி...