கண்ணிழந்த மனிதனும் நாயும்
கண்பார்வை இழந்த ஒருவன் தன் வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்றான். போக்குவரத்து அதிகமாக இருந்த சாலையில் சிக்னல் விளக்கு வரும் வரை நடைபாதையில் காத்திருக்கும் பொழுது, வளர்ப்பு நாய் கலை உயர்த்தி, கண்பார்வை இழந்த அவன் முதலாளியின் கால்களில் சிறுநீர் கழித்துவிட்டது. அவனது வளர்ப்பு நாய் சிறுநீர் கழித்து முடிக்கும் வரை பொறுமையுடன் இருந்த அவன், உடனே தன் வசம் வைத்திருந்த பிஸ்கட் ஒன்றை எடுத்துக்காட்டியதும், நாய் அதை கவ்விக்கொள்ள முயன்றது. அப்பொழுது, அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன், அவனை நோக்கி, "நீங்கள் செய்வது சற்றும் சரியில்லை. உங்கள் கால்களில் சிறுநீர் கழித்த நாய்க்கு பிஸ்கட் கொடுப்பது எப்படி சரியாகும்" என்ற கேட்கவும், பார்வையற்ற அந்த மனிதன் சொன்னான் .. "அப்பொழுதான் அதன் தலைப்பக்கம் தெரிந்தால் தான் பின்பக்கத்தில் உதைப்பதற்கு சுலபமாக இருக்கும்" என்று.