கண் ஆயிரம்

கண் அசைவிலே உலகைக் கண்டேன்
கண்ணால் உலகை அளந்தேன்
கண் மூடி திறப்பதற்குள் மாற்றங்களை
கண்டு மலைத்து நின்றேன்.

கண் பார்வையில் குற்றம் இல்லை அறிந்தேன்
மனக்கண்ணில் குறைபாடு என்று தெளிந்தேன்
கண்ணே மணியே என்ற கொஞ்சலிலும்
கண்ணையே கண்டேன்.

கண் பட்டது என்று கூறக் கேட்டு ள்ளேன்
கல்லடி பட்டாலும் கண்ணடி கூடாது
கண்டேன் உண்மையை வாழ்விலே
கண்ணின் வீச்சைத் தவிர்த்தேன்

கண் ஆயிரம் பேசும் காதலோடு .
கண் ஆயிரம் கட்டளை இடும் அதிகாரத்தோடு
கண் ஆயிரம் விளக்கம் தரும் உவகையோடு
கண் கோடி கனிவை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியோடு..

கண்களைப் பற்றி பாடும் போது
கண்ணிலே தோன்றும் ஒளி மலர
கண்ணிலே கண்ணீர் வழிய
கண்ணோடு தெரியும் பெருமை பொங்க
கண் இறும்பூது எய்துகிறது

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Dec-13, 10:22 pm)
Tanglish : kan aayiram
பார்வை : 946

மேலே