எனக்கு மட்டும் தெரிந்தக் காதல்
கனவுகளில் நீ வந்தாய்!
கற்பனையிலும் நீ வந்தாய்!
என் நினைவுகளில் மட்டும் ஏனடி
உடைந்துப் போகின்றாய் !
உரிமையோடு உனைக் கேட்டால்,
உதாசீனப்படுத்தி விடுவாயோ...
என எண்ணி,
இன்னும் வெளிப்படுத்தவில்லை
என் ஒருதலைக் காதலை.....!!!