மரண தூரம்

இனிக்கும் குரலில் இதயம் கிழிக்கும் மொழிகள் பல சொன்னாய், மயங்கி தான் போனேன்,
மயக்கத்தில் என் இதயம் கிழிய போவதை அறியவில்லை,

பளிங்கு கரங்களின் வெதுவெதுப்பில் என் இரவுகளில் கிறங்கித்தான் போயிருந்தேன்,
நீண்ட உன் நகங்களின் மர்மம் அறியவில்லை,

பின்னிடை வரை நீண்ட கூந்தலில் என்னை நானே தொலைத்து திளைத் துதான் இருந்தேன்,

கூந்தல் காட்டின் இருளின் பயங்கரம் அறியவில்லை,

கடற்கரையில் இயற்கையாய் அமைந்த இரு மணல் மேடுகளாய் உன் மார்பழகில் என்னை புதைத்து இருந்தேன்,

அதுவே என் கல்லறையாகும் புதிர் அறியவில்லை,

அடியே, உன் பார்வை விழும் தூரம் தான் என் மரணம்,

என்னோடு நீ நடந்தால் மட்டுமே என் மரண தூரம் முன் நகரும்,

நின்றுவிடாதே, என் கால்கள் நிற்காது, மறந்துவிடாதே!

எழுதியவர் : கணேஷ் .க (30-Dec-13, 5:24 pm)
Tanglish : marana thooram
பார்வை : 120

மேலே