திரு பூங் கழல் நிழலே

இக் கவிதை குரு மற்றும் இறையின் திருவடியின் நிழல் பற்றியது.
1. அருகிலிருக்கும் அருவியதின் சாரலே தென்றலுடன்
சேரும்அங்கே நெருங்கிடவே குளிர்நீரால் நனைக்குமென
அருவிபோலவே நெருங்கிடவே குருவடிநிழல் குளிர்ந்திடுமென
தருணத்தில்நனைக்குமென இக்கவிப்பூவை குருபாதமதில் சமர்பிகிறேனே.
2.காரணமே யாதுமின்றி கல்வீசும் உயிருக்கும்
மரநிழல் தீதன்றி பசும்மணம்வீசும் காத்திடும்
ஈரடிநிழல் காரணமின்றி கதிநிழல் ஆகிநின்றுடுமென
பரகழல்என இக்கவிபூவை குருபாதமதில் சமர்பிக்கிறேனே..
3. இசையுணர் இருenaசெவி கானலுனர் கண்உணரதென
ஆசைபூஉணர் புலன்நாசி பால்மதுஉணர் நா அறியாதென
ஆசைஉணர் மனதிற்கும் ஊகித்துஉணர் புத்தி எட்டாதென
இசைக்கும்நிழலென இக்கவிபூவை குருபாதமதில்
சமர்பிக்கிறேனே .
4. பாராயணம் செய்துசெய்து உயர்நூல் கருதுணர்வரென
காரணம்ஏதேன புரிந்துபுரிந்து கருத்தால் காரணம்உணர்வாரென
பாரபவம் இதென திரிந்து திரிந்து குரு கருணையால் திரு நிழல் உணர்வரென
வரமதென இக்கவிபூவை திருபாதமதில் சமர்பிக்கிறேனே.
5. ஒருவார்த்தை தரும் மொழிஉணர்வை கற்றமனமும் தானறியலாம்
இருப்புதரும் இருப்புணர்வை இல்லாமனமும்
தானறியலாம்
அருவுருதரும் அருவுணர்வை குருஈரடி நிழல்உணர்வது
குருகருணைலென இக்கவிபூவை திருபாதமதில் சமர்பிக்கிறேனே .
6. மதிநிழல் குளிரென அருவிசாரல் குளிரென
அதிஉன்னத தாயினது அரவணைப்பு வெப்பமென
ஊதிடும்குழல் உடையோன் நிழலென கவிஉவமை எட்டா அதிநுண்குளிரென
இக்கவிப்பூவை திருபாதமதில் சமர்பிக்கிறேனே.