என்னுயிர் எதிரியே....
உன் பயம்
என் பலமல்ல….
உன் பலவீனமும்
என் பலமல்ல
என் உணர்வுகளின் தீ
உன்னை முற்றிலும் எரிக்க முயல்வதை
நீ தடுக்க நினைப்பதாய் தவிர்க்க முயல்கிறாய்…
ஆனால் ஒரு போதும் தடுக்க முடியாதென்பதை
பின்னால் நீ அறிவாய்
ரகசிய ஆலோசனையில்
என் முடிவை தீர்மானிக்கிறாய்…
அணுதினமும்
உன் எண்ணங்களாய்
என்னை சுமந்து கொண்டிருக்கிறாய்.
வெட்டப்படும் சதுரங்கக் காயாக இருப்பதைப் பற்றி
நான் எப்போதும் கவலைபடுவதில்லை…
நீ வெட்டும் முன்னும்,
வெட்டிய பிறகும் நான் ராஜாதான்…
வெட்டி விட்டோம் என
உனக்குள் நீ மார்தட்டிக் கொள்ளாதே…
நீ வெட்டியது என் உயிரைத்தான்
உன்னை சதா எரித்துக் கொண்டிருக்கும்
என் உணர்வுகளை அல்ல
................
..............
..............
நீ வெட்ட வெட்ட
நான் உயிர்த்துக் கொண்டேயிருப்பேன்…