என் காதல் கண்மணி

அனைத்தையும் சொல்லும் அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை...
அன்பாய் கேட்கும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை...
ஆறுதல் தரும் கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை...
புரியாமல் பார்க்கிறாய்
உன்னிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் காதலை......

எழுதியவர் : nimmi (2-Jan-14, 7:38 pm)
Tanglish : en kaadhal kanmani
பார்வை : 208

மேலே