பொங்கல் பரிசுயர்த்திப் போட்டிடவா எம்பாவாய்
திங்கள் முகம்மாறித் திக்கொழிந்து போனாலென்?
சிங்கம் நரியாகிச் சீரிழந்து வாழ்ந்தாலென்?
சங்கும் படைவிட்டுச் சாவுக்கே அழுதாலென்?
பொங்கும் கடல்வீடு புகுந்தேடுத்துப் போனாலென்?
சிங்கர் படைமீனச் சமூகத்தைப் பிடித்தாலென்?
தங்கம் நிறமிழந்து தரைசரிந்து வீழ்ந்தாலென்?
சுங்கம் உயர்ந்தாலென்? சுருள்வாயு மறைந்தாலென்?
பொங்கல் பரிசுயர்த்திப் போட்டிடவா எம்பாவாய்!

