மறக்க நினைக்கிறேன்
மறக்க நினைக்கிறேன் .
நீயாக வந்து
என்னிடம் பேசியதையும் ,
நான் உன்னிடம் பேசியதையும் ,
உன்னை பார்க்க வேண்டும் .
என்பதற்காக் காத்து இருந்ததையும் .
உன்னோடு வரவேண்டும் என
எனது அன்றாட வேலைகளை மறந்ததையும்,
உனது ஆசைகளுக்காக
எனது ஆசைகளை மறைத்து
என்னை மாற்றிகொண்டத்தையும்,
என் அலைபேசியல் எப்போதும்
உன் அழைப்புகள் இருந்ததையும் ,
எனது எண்ணங்களை
உனக்கு கவிதையை கொடுத்ததையும்,
அதை படித்து
புரிந்தும் ,புரியாததுபோல்
நீ நடித்ததையும்,
நீ அழைத்த இடங்களுக்கு
எல்லாம் நான் வந்ததையும்,
என் அருகில்
நீ அமர்ந்து இருந்ததையும்,
உன் கரம் பிடித்ததையும்,
உன்னை மணக்க எண்ணியதையும் ,
இப்போது,
உன் நினைவுகளோடு ,
நான் வாழ்வதையும் .
நீ என்னை மறந்து சென்றதையும்
மறக்கவே நினைக்கிறன் . .. . .. . .. .