காதல்

இதயங்கள் விரும்பி
இளமைகள் அரும்பி
இனிமையில் இருந்து
இக்கட்டில் முடிவது
இதுவே காதல் ...
காதலிக்கும் போது
பெண்ணை பார்ப்பான்
கல்யாணத்தின் போது
பொன்னை பார்ப்பான்
இன்றைய காதல் இதுவன்றோ !!!

காதலிக்க சம்மதம் பெண்ணிடம்
கல்யாண சம்மதம் அவன் பெற்றோரிடம்

அழகிய பெண்ணிடம் மட்டும் மலரும் காதல்
காதலா காமமா ?
எது காதல்
கல்லறை சென்றாலும்
சில்லறை தேடும் மனிதனின் காதலா!!!
மண்ணை நாடி ஓடிவரும்
மழையின் காதலா !!!!

எழுதியவர் : kanagarathinam (3-Jan-14, 8:34 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே