எங்கே போனாய் நீ

உன் கைவிரல் பட்டவுடன்
தொங்கவிட்ட சேலையை
போர்த்திக்கொண்டது வெட்கத்தில்
===ஜவுளிக் கடை பொம்மை===

உன் பார்வை பட்டவுடன்
சட்டென மலர்ந்து மணம் பரப்பின
===வண்ணமிகு மலர்கள்===

என் பாட்டி சொன்ன கதையில் வந்த
காகமும் வடையோடு காத்திருக்கிறது ===உன்னைக்காண ===

உன் பாதம் பட்ட தண்ணீர்
தேடி நீச்சல் அடிக்கிறது
===மீன்கள்===

உன் தடம் பட்ட இடத்தில்
வளர்ந்த இலையுதிர்கால மரங்கள்
வசந்தகால மரங்களாய் மாறி
===தளிர் விட்டன===

உன்னையே நினைத்து வாழும்
என்னை மட்டும் தவிக்கவிட்டு
பார்க்க நேரமில்லாமல்
===எங்கே போனாய் நீ ===

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (5-Jan-14, 2:25 pm)
Tanglish : engae ponaai nee
பார்வை : 314

மேலே