துள்ளி விளையாடும் கவிதை

நதிக்கரைகளில் விழுகின்ற சிற்றருவிகள்
நிலப் பெண்ணின் விரல்களில் முத்து மோதிரங்கள்..
படக் கென்றே பிறக்கின்றே கவிதை வரிகள்-அங்கே
சடக் கென்றே துள்ளி விழும் சின்ன மீன்கள்....!
தூண்டிலது உங்கள் ரசனை....நீங்கள்
தூக்கி எடுக்க தவறியதால்.....இப்போது
துள்ளி ஓடுகிறேன் அதோ அடுத்த கவிதை.... என
மீண்டும் நதியோட்டம்......