என் பொம்முக்குட்டிக்கு -நாகூர் கவி

அல்லி இதழ் விரித்து
அன்பு தங்கை சிரித்திடுவாள்
அண்ணன் என்வருகை கண்டு
அவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !

பஞ்சு விரலாலே பிஞ்சவள்
என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்
கொஞ்சி விளையாடிட குழந்தையவள்
பூங்காவுக்கு கூட்டிச்செல்ல அழைத்திடுவாள்... !

கடைக்குச்சென்று மிட்டாய் வாங்க
சில்லறை காசும் கேட்டிடுவாள்
அதைவாங்கி தின்ற மறுகணமே
மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பாள்... !

மழலையவள் கையில் பொம்மையோடு
அன்பாக எப்பொழுதும் விளையாடிடுவாள்
அவளே குழந்தை அவள்பொம்மைக்கு
தாலாட்டு ஒன்றைப் பாடிடுவாள்... !

என் கையைப் பிடித்து
ஊரு சுற்றி மகிழ்ந்திடுவாள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களிட்டே
மொத்தக் காரியத்தையும் முடித்திடுவாள்...!

எழுதியவர் : நாகூர் கவி (8-Jan-14, 1:33 am)
பார்வை : 367

மேலே