வாழ்க்கை

பயண இலக்கை
நோக்கி நகரும்
புகைவண்டிப் பயணம்.
யாரோ ஏறுவார்
எவரோ இறங்குவார்
சில காத்து நிற்பார்
அறிமுகங்கள்
நட்புக்கள்
புதுமைகள் கலந்து
பயணம் தொடரும் .
முகம் சுழித்து முதுகு காட்டி
இருப்பவர் மத்தியில்,
காலாற அமர இருக்கைகளில்
இடம் கொடுப்பாரும் உண்டு.
ஒவ்வோர் தரிப்பிலும்
ஒவ்வோர் முகங்கள்.
அறிமுகமில்லாத
உறவுகள்.
இன்பம் துன்பம்
ஏக்கம் பயம் எத்தனிப்பு
எதிர்பார்ப்புடன்
தொடரும் பயணம்
இறுதி எல்லை வரை!

எழுதியவர் : உமை (10-Jan-14, 1:37 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 82

மேலே