நாகரிகாதின் உச்சம் வெறுமையாகிறது மனங்கள் பொங்கல் கவிதைப் போட்டி

நாகரிகதின் உச்சம்
வெறுமையாகிறது
மனங்கள் ...!!!

தெரிந்தவரை கண்டால் தலையாட்டி நின்று கதைத்து கைகுலுக்கிவிட்டு போகும்
காலம் மாறி உறவினரை கூட தொலைபேசியில் உபசரித்து விட்டு ஒதுங்கும் காலம் ஒப்பந்தமாகிவிட்டது
சித்தப்பா மாமா பெரியம்மா
என்று சொல்லி சொல்லி வளர்த்த தலைமுறை
அதை சொல்வதற்கும் பண்பு உணர்ந்து நடப்பதற்கும்
பிரியம் இல்லாமல் பிரிந்து கிடக்கிறது திருமணங்கள் பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு
நாலு நாளுக்கு முன்பே
வீடு நிறையும் உறவுகள்
மொய் எழுதுவதற்கும் போட்டோ எடுப்பதற்கும் உரிய நேரத்தில் வந்துவிட்டு ஒதுங்கி விடுகிறது உறவுகளை கணினியுகம் பிரிக்கவில்லை
உறவுகளே அந்த சிறகுகளை முறித்துவிட்டு வீட்டு மூலைக்குள் அழுது கொண்டு தான் கிடக்கிறது.

ஐயோ என்றால் ஓடிவரும் உறவுகள் செத்தவீடு நடந்தாலும்
கடைசி நேரத்திற்கு வந்து
முகம்காட்டி விட்டு ஓடிவிடுகிறது....

இந்த அவசர வாழ்வில் இப்படியிருந்து எதை சாதித்து விட்டீர்கள் நேரமில்லை என்ற ஒற்றை சொல்லை வைத்து
இனியும் ஒப்பாரி பாடாதீர்கள்.
அது உங்களுக்கு நிறைவாக இருக்கலாம்.
ஆனால் உங்கள் குழந்தைகள் நாளை திக்கு தெரியாத சமூக காட்டில் அனாதையாக அலைவார்கள் ஆதலால்
நம் முன்னோர்கள் சேர்த்து வளர்த்த கூட்டு உறவு வாழ்க்கையை ஒற்றை ஆக்காது
மனம் இறங்கி வந்து
அன்பை பொழியுங்கள்
இல்லையேல் மாதத்தில் ஒரு தற்கொலை நடப்பதற்கு
எல்லோரிடமும் மனநோய் எதிரி உயிர் எடுக்க காத்திருப்பான்.....!!!

எழுதியவர் : Akramshaaa (17-Jan-14, 9:52 pm)
பார்வை : 79

மேலே