விலை போகா விலை மாதுகள் - மணியன்

மனிதன் படைத்த
சகம் தரும் எந்திரங்கள். . .

வறுமைக்கு வடிகால் தேடி
வடி காலாய் ஆனவர்கள். . .

தாளமது மாறிப் போயும்
சுதி சேரும் ராகங்கள். . .

மனிதம் தேய்ந்ததற்கு
மறுக்க முடியா ஆதாரங்கள். . .

இரவினில் மலர்ந்து தினம்
இன்னலுறும் புது மலர்கள். . .

கள்ளிப்பால் தப்பி வந்து
கரையானால் சூழ்ந்தவர்கள். . .

முக்தி பெற நினைக்குங்கால்
முதுமை வரின் அதுவே கூடும். . .

சதையால் சதம் கண்டும்
களம் நிற்கும் காரிகைகள். . . ! !

ஓய்வு பெற இவர்கள் தயார்
ஓய்வூதியம் தருவது யா. . . ரோ. . ! ! ?,

எழுதியவர் : மல்லி மணியன் (18-Jan-14, 5:00 am)
பார்வை : 181

மேலே