மரபிலிருந்தே வந்திட வேண்டும் புதியது
மரபிலிருந்தே வந்திடவேண்டும் புதியது - எந்த மண்ணிலுமுள்ள மாற்றிடமுடியா விதியிது!
உருபுடனிருக்கும் உய்திடத்தக்க நெறியிலே - புதுமை
உண்மையைஒட்டி உணர்வுடன் படையும் முறையிலே!
மரபினையாக்கல் மனிதனையாளும் இயற்கையே - அதனை
வல்லமைகொண்டு வெல்லிட லில்லைச் செயற்கையே!
திரிபுகள்யாவும் மரபினைமதித்தே நிகழ்த்திடும் - இந்தச் செம்மையை உணர்ந்தார் செய்கைகள்நின்று திகழ்ந்திடும்!
பரம்பரையாக அனுபமுறையாற் படித்தவர்-தள்ளிப் பழுதுகள்தக்க பயனுள்ளவற்றைக் கொடுத்தனர்!
வரம்புகள் நன்று வடிவினுக்கென்று செய்கையில் -விட்டால் வழுக்கிவிழுந்து அழுக்கிலமிழ்வார் மெய்யீது!
குடிகுடியென்று குடித்துமடிந்து சென்றவன் - விதியைக்
கொண்டவன்இனிமேற் குடித்திடமாட்டேன் என்றனன்!
விடுவிடென்றோடி விதியினைமறுநாள் மாற்றினான் - பின்னர்
விட்டபிழைக்கு வருந்தினன் மீண்டும்! ஏற்றதா?
பயன்தரவில்லைப் பழையதுதென்னை என்பதால் - தேங்காய்ப் பாலினைத்தள்ளிக் கறிகளைப்பண்ணும் என்பரா?
முயன்றுடன்தேங்காய் மூச்சுடன்நட்டுப் புதியது - நன்றாய் முளைத்திடச்செய்வார் களைத்திடமாட்டார் இதுபொது!
இத்தகைப்புதுமை இயல்புடன் ஒன்றி இயற்றிடும் - பண்பை
எள்ளளவேனும் இகழ்ந்திடின்தொல்லை வயிற்றினில் மெத்தஅடிக்கும் வெற்றுடலாகும் எழுத்துகள் - இதனை மிக்க உணர்ந்து மேண்மைகள் செய்வார் பழுத்தவர்!
பத்திரம் உயிர்ப்பண் புங்களின்கையில் பார்த்திடும் - என்ன பாடுகள்பட்டும் கேடுகள்கெட்டும் காத்திடும்!
கொத்திநல்லெருவைக் கொட்டிநீர்பாய்ச்சி அதனிலே - திறமை கொண்டுகொழுத்த விளைவுகள்கொழியும் புதுமையாய்!