தானே பேசும் தம்புராக்கள் - மணியன்

கோப்பையில் வீழ்ந்த கோமான்கள்
குடிசையை துறந்த குப்பை கூளங்கள். . .

உழைத்ததை ஊதிடும் உத்தமர்கள்
உறக்கம் தொலைத்த உதவாக்கரைகள். . .

பசியறியா பாவ ஜீவன்கள்
பகட்டறியா பட்டினத்தார்கள். . .

சாக்கடை சூழ்ந்த வாசதாரிகள்
சாவின் கட்டியம் கூறும் கரவொலிகள். . .

வாழத் தெரிந்தம் தெளியா குட்டைகள்
வார்த்தையில் எப்போதும் வளவளாக்கள். . .

தன்குடி கெடுத்த குடி காரர்கள்
தானே பேசும் தம்புராக்கள். . .

அள்ளி வழங்குவதில் கர்ணர்கள்
அரசுக்கு இவர்தான் அச்சாணிகள் . . .

இனி இவரின்றி ஓடாது அரசு எந்திரங்கள். . ! !

எழுதியவர் : மல்லி மணியன் (18-Jan-14, 10:58 pm)
பார்வை : 150

மேலே