நாளை நிச்சயம் விடியும்
நாளை சூரியன் வரும்
நான் மலருவேன்
என்று மொட்டுக்கள் நினைப்பதில்லை
நான் மலருவேன்
நாளை சூரியனும் வரும்
என்றே நினைக்கிறது - மலர்கிறது..!
நேர்மறை எண்ணங்களே
நிம்மதியாய் சுற்ற வைக்கிறது பூமியை....!!
விஞ்ஞானத்துக்கு எதிரானது இது என்று
விளங்கியே நாம் சிந்திக்கத் தொடங்கினால்..
விவரிக்க ஒன்றுமில்லை - வழக்கம்போல்
விடியலுக்காக நாம் காத்திருக்க வேண்டியதுதான்
சரி அது போகட்டும்
மொட்டுக்களின் பாசை நமக்குப் புரியாது
எனவே
நாளை விடியும் என்றே நாம் நம்புவோம்