சம்மர் ஸ்பெஷல்

உஷ்ணத்தால் வரட்டு இருமல் அதிகம் வரும். கடுக்காய், சித்திரத்தை இந்த
இரண்டையும் சட்டியில் போட்டு சிவக்க வறுத்து, இடித்து தூள் செய்து கொள்ளவும்.
வரட்டு இருமல் வரும்போது ஒரு சிட்டிகை வாயில் போட்டு அதக்கிக் கொண்டால்
போதும். இருமல் மட்டுப்படும்.*




** நன்றாகக் கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சைச் சாறும், வெங்காயச்
சாறும் கலந்து, பெருங்காயம் சேர்த்துக் குடித்தால் கோடைக் களைப்பு பறந்து
போகும்.* வெளியில் செல்லும்போது நாக்கு வறண்டு போய்விட்டதென்று ஏதோ தண்ணீரில்
கலக்கிய சர்பத்தையோ, ஐஸ் க்ரீமையோ சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள
வேண்டாம். வீட்டிலிருந்து கிளம்பும்போதே மோர் குடித்து விட்டு, கையில் மோர்
அல்லது தண்ணீர் வைத்துக் கொள்வதே நல்லது. இதனால் உங்கள் உடல்நலம்
பாதுகாக்கப்படும்.*மாங்காயை நறுக்கிப் பச்சையாகச் சாப்பிடும்போது
உப்புத்தூளைத் தூவிக் கொள்வோம். இப்படிச் செய்வதைவிட, உப்பைத் தண்ணீரில்
கரைத்து, அதில் மாங்காய்த் துண்டுகளை நனைத்துச் சாப்பிட்டால் ருசி
அதிகரிக்கும்.* கோடையில் பலருக்கு நீர்க் கடுப்பு உண்டாவது இயற்கை. எலுமிச்சம்
பழச்சாற்றில் நல்லெண்ணெயைச் சமஅளவு கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க் கடுப்பு
நீங்கிவிடும்.* வேர்க்குருவால் ஏற்படும் அரிப்பைப் போக்க உடல் முழுவதும் தயிரை
நன்கு தடவி, பதினைந்து நிமிடம் வரை ஊறவிட்டு குளிக்க அரிப்பு நீங்கிவிடும்.***
கோடை காலத்தில் ஃப்ரிஜ்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத்
தயிரிலிருந்து எடுத்த வெண்ணெயை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால்
மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.*

எழுதியவர் : முரளிதரன் (20-Jan-14, 11:15 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 104

சிறந்த கட்டுரைகள்

மேலே