முதல் சிறுகதை தொகுப்புநமது தோழரின் நிதியளிப்போடு
தோழமை நெஞ்சங்களே வணக்கம்.
தளத்தின் படைப்பாளிகளின் நான்கு கவிதைத் தொகுப்புகள் (1 வெளியிட்ட நிலை 2 முடிவடையும் நிலை, 1 தொடங்கப்பட்டுள்ள நிலை) உருவாக்கப்பட்டுள்ளது. கவிதையின் மீதான, தமிழின் மீதான, நமது ஒற்றுமையின் மீதான, கூட்டுறவு முறையின் மீதான, விழைவையும் விரிவையும் நமக்கு விளக்குகின்றன.
இந்நிலையில் கவிதை அல்லாமல் சிறுகதையும் பலர் படைத்து வருகின்றனர். சிறந்த சிறுகதைகளின் ஒரு தொகுப்பு கொண்டுவர அதற்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள பெயர் வெளியிட விரும்பாத தளத்தின் தோழர் ஒருவர் முன்வந்துள்ளார். அவரை வாழ்த்துவோம்.
ஆக தளத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு தயாராகின்றது. இதுவரை தோழர்கள் பொள்ளாச்சி அபி, தேவா, கவிஜி, வா. நேரு, குமரிப் பையன், சந்தோஷ்குமார், பெ. பி. அய்யா ஆகியோரின் சிறுகதைகள் தொகுக்கப்படுகின்றன. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கரங்கள் ஒன்றிணைந்தால் காலம் நம் கைகளுக்குள் தூரங்கள் நம் விரல் நுனியில்
வாருங்கள் ஒன்றிணைவோம் ...
சோழிக்குள் உலவும் திறன் மிக்க தோழர்களின் படைப்புகள் பூமிப்பரப்பின் விளிம்புகளிலும் வெளித் தெரியட்டும்.
ஊரறிந்தோரை உலகறிய வைப்போம்.
இன்னமும் எனக்கொரு அவா என் மனதில் கவிதைத் தொகுப்பு, பெண் படைப்பாளிகளின் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு என தொகுப்புகள் உருவாக்கியுள்ள எனக்கு மரபுக் கவிதைகளுக்கென்று தனியாக சில படைப்பாளிகளை ஒன்றிணைத்து வெளியிட பேராவல் கொண்டுள்ளேன்.
நம்பிக்கை வைத்துள்ளேன்.
நல்ல நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை. காத்திருப்போம்...
பெருகும் அன்புடன்
அகன்