காதலின் ஊடல் -- கண்ணன்

நம் காதல் மேல்
எவர் கண்ணும் பட்டுவிடக் கூடாது
என்று எண்ணி.. ஊடல் கொண்டாயோ..!!

சிறு காரத்திற்க்குப் பின்
சுவைக்கப்படும் இனிப்பு போல்
நம் காதலின் வீரியமும் கூடும்
என்று எண்ணி.. ஊடல் கொண்டாயோ..!!

பேசிக்கொண்டே இருக்கும் இதழ்களுக்கு
ஓய்வு கொடுக்கும் எண்ணத்தில்
மௌனம் மூடியதொரு ஊடல் கொண்டாயோ..!!

இல்லை..

ஊடலும் ஒருவிதக் காதல்
என்று உணர்த்த.. ஊடல் கொண்டாயோ..!!

பெண்ணே..!!

பார்வை பார்த்த கணம்
கோபம் மறையும் என்று
பார்க்காத ஒரு ஊடல் கொண்டாயடி..!!

காரணக் கண்களில் காணாமல்
கோபத்தில் வீழ்ந்தாயடி.. !!

அன்பால்..

தீண்டிப் பார்க்கும் விரலை.. தீ எனக் கருதி சட்டென்று விலகிச் செல்வதேனடி.. !!

கண்களுக்குத் தான் கண்ணீர் தேவை
ஏனோ.. காற்றுக்குத் தனம் தருகிறாயடி..!!

உலகம் என்மேல் சுழல்வதுபோல்
பெரும் பாரம் கொண்டேனடி..!!

நம் கண்களில் இருந்து
அந்தக் காட்சி மறைந்திட
ஒரு வரம் கேட்கிறேனடி.. !!

ஊடலின் நீளம் கூடிச் சென்றால்
நம் காதலுக்கு ஆகாதடி.. !!

பேசிவிடடி பெண்ணே..
மௌனம்..
கோபத்தின் அணுக்களை அடக்கி வைக்கும்
பெரும் வெடிப் பொருளடி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (21-Jan-14, 7:52 am)
பார்வை : 684

மேலே