தாயெனும் நீ

கண்ணயர்ந்த போது
என் கற்பனையில் சிணுங்கிய
என் கைத்தொலைபேசி
உன் அழைப்பில் நிஜமாய் சிணுங்குது

அரை மயக்கத்தில் 'ஹலோ' என்றேன்
அரை நொடியில் என் உயிரான உன் குரல்
நான் அறியா என்னை நீ அறிவாய்
என் தூக்கத்தை கண்டறிந்தாய்

இதழோரப் புன்னகையோடு அனுமதி கேட்டேன்
இமைகளைத் திறந்து உயிர் பெற
என்றும் இனியவன் நீ
சிறு புன்னகையோடு மீண்டும் அழைத்தாய்

முடங்கிப் போன என் அணுக்கள் உயிர் பெற்றது
முடிந்து போன என் வாழ்க்கை சிறகு விரித்தது
மீண்டும் என் வாழ்வில் சந்தோசம் பிறந்தது
என் உயிர் நண்பன் உன்னை காண்பதை நினைத்து

என்னவன் என்னை விட்டு பிரிந்த போது
என் குழந்தைக்காய் உயிரை கையில் பிடித்தேன்
இன்று அறிந்து கொண்டேன் - என் உயிர்
என் உயிர் நண்பன் உன்னைக் காணவே உடலில் தரித்தது

கருவறையில் சுமக்கா விட்டாலும்
நீயும் என் தாயே - ஏனெனில்
இதயத்தில் என்னை சுமக்கின்றாய்
அதுவும் ஒரு கருவறை தான்.

எழுதியவர் : (22-Jan-14, 1:57 pm)
பார்வை : 134

மேலே