கவிதை எப்போது எழுதுவேன்

கவிதை எப்போது எழுதுவேன்?
***************************************

கேள்வி கேட்க
பிறந்தவன் நான் ?
என்னை சுற்றியே
என்னை தேடுவேன்.
நான் மட்டும்
எப்போதும்
சிலையாக இருப்பேன்.
சிந்தனைகளை
உலக வீதிகளில்
உலாவ விடுவேன்.

உலக அறிவுகளை
படித்துக்கொண்டே
உயர கற்பனையில்
மிதந்து கொண்டிருப்பேன்.

ஆழக்கடலில் மூழ்கிகொண்டே
பிரபஞ்சத்தின்
வேறொரு கடற்கரையில்
பயணப்படுவேன்.


இன்றும் நான்
கவிதை எழுதவில்லை.
எப்போது கவிதை
எழுதப்போகிறேன் ?
தெரியவில்லை...!
இதுவும் கவிதை
என்று தோன்றவுமில்லை.

என்னால் ஒன்று
உறுதிப்படுத்த முடியும்.
நான் கவிஞன்......!!

எப்போது ?
எப்படி ?

என்று எனக்கு
எல்லாவித கேள்விகளையும்
கேட்க தெரிகிறதோ ?
என்று எனக்கு
எல்லாவித கேள்விகளுக்கும்
விடையளிக்க தெரிகிறதோ ?
என்று எனக்கு
கேள்விக்குறிகள்
ஏளனக்குறிகளாக அல்லாமல்
ஆச்சரியக்குறியாக
என் வாழ்வில்
அர்த்தபடுகிறதோ
அன்று
நான் கவிஞன் !
நானே கவிஞன்.!
என்று நான்
மார்தட்டி
உங்களை கைதட்ட வைப்பேன்

அதுவரை..

இதுவரை
இருந்ததைப்போல..
உங்களின் ரசிகனாக
உங்களை
ரசித்துக்கொண்டிருப்பேன்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (22-Jan-14, 3:15 pm)
பார்வை : 299

மேலே