எப்படி மாட்டினேன் இப்படித் தவிக்கிறேன்
கண்களுக்குள் ஊற்றாகி ,
இதயத்தில் அமுதாகி ,
என் அன்பில் கலந்த
ஆரமுதே !
ஆதவனிலுமில்லை...
உன் போல் தெளிச்சம்!
எவ்வுயிரியிலும் இல்லை...
உன்னழகைப் போலொரு
வெளிச்சம்!
வேண்டுமென்றே
உன்னைக் காதலிக்கிறேன் !
ஆம்! நீ என் இதயத்தைக்
காயமுறச் செய்வாயென்று
தெரிந்தும் !
எப்படிக் கிடைத்தது
அழகே உனக்கு
இப்படியோர் பேரழகு!