சாதி மாறிய காதல்

சாதி மாறி காதலித்த
பாவம் செய்த அலங்காரம்

மேன்மை மிகு பாரதத்தின்
பெயருக்கொரு அவமானம்

மனு நீதி ஆட்சியில்
மாட்டுக்கும் நீதி உண்டு

மானங்கெட்ட பூமியில
மங்கைக்கு நீதியில்லை

ஏட்டில் சொன்ன பாடத்தில்
நரகம் என்று ஒன்று உண்டு

நாட்டில் நடக்கும் காரியங்கள்
சான்றுகளாய் அதற்கு இங்கு

இன்று வந்த காட்சி யாவும்
சாட்சி இன்றி செத்து போகும்

இதுவும் கடந்து போகும் என்று
சொல்லி விடலாம் விட்டு விடுங்கள் !!

எழுதியவர் : பெருமாள் (24-Jan-14, 10:35 am)
சேர்த்தது : பெருமாள்
பார்வை : 314

மேலே