கவிக்கூடை
விழாக் களைப்பில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
அவ்வெளி!
எத்தனையெத்தனை ஆசை நிகழ்த்தலும் எத்தனையெத்தனை நிராசை நிகழ்த்தலுமாக ஓடிக்கொண்டே இருக்கிறது நிகழ்ந்த காலத்தை கடந்துவிட்ட நிகழ்கால சாலை!
குருட்டுக்கெல்லாம் வெளிச்சமாய் இருந்த
அது வெறிச்சோடி கும்மிருட்டில்
உறங்கிக் கொண்டிருக்கிறது!
ஒரேயொரு மின்மினி பூச்சி
மட்டும் அடரிருளில் அடையாளம் தெரியாத ஏதோவொரு ஞானமரத்துச்சத்தில்
பறந்து திரிந்து அந்த இருளை
நிரப்பப் பார்க்கிறது...!

