தென்றல் விடு தூது

அன்றலர்ந்த செங்குவளை,
அதரம் பெற்றவள் நீ...!

மொட்டவிழா ஆம்பல்கள்
கண்களாகிட பாதிப்பார்வை
பாத்தவள் நீ..

செவ்வரி வண்டாடும்
கருங்கூந்தல் முடிந்தவள் நீ..!

அள்ளித் தெளித்தாலும்
அதையும் கோலமாக்கிக்
கொண்டவளும் நீ..

சொல்லவும் நிகரில்லை ,
கொடிமலராய் அன்ன நடை..

கள்ளமாய்ப் பார்த்தனையே .
காதல் வந்து சேர்ந்ததுவோ..?

மெல்ல அரும்புதையே
என்காதல் மேல் வரிசை
மீசையெல்லாம் .

கரும்பான நினைவுகளைக்
காலம் கரைத்தே
விட்டிருந்தாலும்,

என்னகத்து மயிலெனவே.,
கோலமிட வாராயோ..?

பட்டலயும் பாட்டுக்களில் ,
பாதியுயிர் போகுதையே..,

ஏங்கி நிற்க முடியவில்லை ,
தேம்பிக் கலங்கும்
திராணி இல்லை .

உருகி உனைவருடும்
தென்றல் அதைத்தேடியே
தூது ஒன்றை விட்டுவைத்தேன்

பதில் தூது விடுவாயோ..!
தென்றல் மறுத்தாலும்
தேம்பி நில்லாய் நானறிவேன்.

அலைபேசி,குருஞ்செய்தி,
முகநூல் அதற்குத் தான்
துணையிருக்கு..

தப்பாமல் நீயுமொரு
காதல் தூது தவழவிடு...!

எழுதியவர் : மின்கவி (25-Jan-14, 10:54 pm)
பார்வை : 418

மேலே