எங்க ஊரு திருவிழா
மின்னுகின்ற
தோரணை ஜொலி
ஜொலிப்புகல் ஊரெல்லாம்
வான
வேடிக்கை...
மகிழ்சிகள்
புது நிகழ்சிகளாக
நிகழ்சிகள் பல காட்சிகளாக
நிகழும் அழகிய
நேரம்...
இரவு பகல்
பாராமல் விழித்திருந்து
மகிழ்ந்திடும் பாசக்கார
உறவுகளுக்கு
ஒரு அழகிய
வான
வேடிக்கை...
வண்ண விளக்குகள்
புதுமைகளாக கவலைகள்
மறந்து ஒன்று கூடி
உறவாடும்
உள்ளத்திற்கு
அழகிய
வரவேர்ப்புகளாக
வருகை
புரிந்திடுமே
பரவசமன்றோ..!
புது நேசமன்றோ...
பாராமல் இனம் கண்டு
புன்னகை புரியும்
புது அழகிய
இரவுகளாக
காட்சி அளிக்கும்
இந்த எங்க ஊரு
திருவிழா
எங்களுக்கோர்
பெருவிழா...