கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

கோபுரத்தின் மேல் புறத்தில் தங்கம் அல்லது செம்பினால் ஆன கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆகம விதிப்படி அபிஷேகம், ஆராதனை மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை செய்யப்படும் கோவில்களில் உள்ள கலசங்கள், ஆகாயத்தில் உள்ள பிராண சக்தியை ஈர்த்து அதனை வெளிவிடுவதோடு, அந்த சக்தியை கலசத்தின் கீழ் உள்ள இறை பீடத்திற்கும் அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறது. நாம் கோவிலுக்கு செல்லும் போது இந்த சக்தியைப் பெறுகிறோம். அதனால்தான் இறைவனை தினமும் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை ஒரு நியதியாகவே எல்லா மதங்களும் வலியுறுத்தி வருகின்றன. கோபுரம் வழியாக இந்த சக்தி வருகிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை?

எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள். உங்கள் ஆன்ம பலம் பெருகும்!

எழுதியவர் : முரளிதரன் (27-Jan-14, 9:53 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 191

சிறந்த கட்டுரைகள்

மேலே