மன்னித்துக்கொள்
முயன்று முயன்று
தோற்று போனேன்
வரிகள் தேடி
தேடி அலுத்துப் போனேன்
திக்கி திக்கி
திணறிப் போனேன்
மை தீர்ந்த எழுத்து கோலைப் போல் ....
சிந்தனையின் சிதறல்களில தான்
நல்ல கவிதைகள்
பிறக்கின்றன...
ஆனால்
என் சிந்தனை முழுதும்
சிறை பிடித்தாய்..
என் கற்பனை எல்லாம்
இடை மறித்தாய் ...
கவிதை எழுத முடியவில்லை
முயற்சிகளை
எழுதாக்குகிறேன்..
கவிதை என
வாசித்துக்கொள்...
இல்லை என்னை
மன்னித்துக்கொள்...