வினாவைத் தேடி அலைகின்றேன்
எவளோ ஒருவள் இடம் கொடுத்தாள்
எவனோ ஒருவன் பரிசளித்தான்
விடையாய் நானும் பிறந்து விட்டேன்
வினாவைத் தேடி அலைகின்றேன்...
புத்தாடை அணிந்ததில்லை
புதுச்சோறு தின்றதில்லை
காலமெல்லாம் நகரும் என்று
கனச்சுமையோடு நடக்கின்றேன்...
குழந்தை இங்கு பிறப்பதெல்லாம்
கடவுள் கொடுக்கும் வரம் என்றால்
அந்தக் கடவுள் தேவை இல்லை என்று
வாழும் வரை நானுரைப்பேன்
தாயின் அன்பைப் பார்த்ததில்லை
தந்தைக் கரமும் கோர்த்ததில்லை
இருந்தும் இங்கு வாழ்கின்றேன்
வாழும்போதே சாகின்றேன்...
உறவாட யாருமில்லை
ஆதரவுக்கு நாதியில்லை
அச்சத்தோடே இருப்பதனால்
அனாதை என்றே பெயரேடுத்தேன்..