பிரபஞ்ச யாசகம்
நடுவர்க்க ஆணிவேர்
தழைத் தலைகளுக்கான
உயிர்த்தண்ணீர்
தேடிப் பயணிக்கிறது
நேர்வழியில்....!!
உறிஞ்சல் சேகரங்களை
களவாடிக் குடித்தே
பழகியிருக்கிறது .... எல்லை
தாண்டி
பரவிப் புனைந்தேறிய
சல்லிவேர் பகட்டுகள்....!!!
வருடங்களாய் துளைத்ததில்
மூலங்கள் தொட்டு
ஓய்விலும் உழைத்திருக்கிறது
ஆணிவேர் பாரம்பரியம்..!!
மலட்டுத் தலைமுறைகள்
ஒருமுறை பெருக்கித்
திளைத்து ...
அடுத்த மழைக்கே
சாய்ந்து விட்டிருக்கிறது
சல்லிவேர்த் தொகுப்புகளும்...!!
எப்பொழுதும் நிறைந்து
கிடக்கிறது .. ஆணிவேர் நிழலடியில்
மென்று தொடரும்
ஆட்டுக்குட்டிகளும்...அதிர்ந்து
பறக்கும் புறாக்களும்...!!
நாழிகைக்கு ஒன்றாய்
மாறிக் கொண்டிருக்கிறது
சல்லிவேர் புதர்களில்
இரத்த வாடைகளோடு
ஓநாய்களும்....
கொத்திய மிச்சங்களோடு
கழுகுகளும்...!!!
எல்லாம் கண்டுணர்ந்து
சில்லுகளாய் சிதறிப் போக
ஒரு
நெருப்புக்கற்றை
யாசித்துக்கொண்டே சுழல்
தவமிருக்கிறது
பிரபஞ்சங்களின் வனம்....!!