தமிழர் உழவன் பெருநாள்

வெட்டிச்சாய்த்து, சுட்டுக்கொன்று
இரத்தம் குடிக்கும்
இனத்தாரின் நடுவே - ஒரு
துளி வேர்வையில்
உலகத்தின் பசியாற்றும்
உழவனின் திருநாள் - எங்கள்
தமிழனின் பெருநாள் .

ஏவுகணை வீசி, குண்டுமழை பொழிந்து
நாட்டை (சுடு) காடாக்கும்
இனத்தாரின் நடுவே
சாட்டை வீசி, முத்து (தானிய) மழை பொழிந்து
காட்டை பொன்னாக்கும்
உழவனின் திருநாள் - எங்கள்
தமிழனின் பெருநாள் .

குடிதண்ணீர் வீடுக்குளத்தில் வழிந்தொழுக
மூச்சுக் காற்றை உஷ்னமாக்கும் குளிர்சாதனம்
ஓயாமல் இயங்கும் இனத்தாரின் நடுவே
குவளை நீரில் குடித்தனம் நடத்தும்
குடிசை முகப்பில் முகவரிகானும்
உழவனின் திருநாள் - எங்கள்
தமிழனின் பெருநாள் .

இனிய உழவர்தின (தமிழர்தின) வாழ்த்துக்கள்

எழுதியவர் : செ.தினேஷ்குமார் (28-Jan-14, 2:43 am)
பார்வை : 953

மேலே