தேடல் ஆடவன்

நினைவலைகள்
மனதிற்கு உரியவனாய் மாறியது
உன்னை கண்ட பிறகு நிரந்தரமாக !

மனதிற்கினிய இசையையும்
மனம் ஏற்க மறுக்கிறது
உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் !

உதிரம் உறைந்து
துடிப்பை நிறுத்தி
உணர்வை இழந்து நின்றேன்
உன்னைக் கண்ட ஒரு நிமிடம் !

மறக்க முடியா கனங்களில்
ஒன்றாய் மாறியது அன்று !

என் கண்ணீருக்கே ஆறுதல் கூறிய
உன் கண்கள்
என் ஆனந்த்திற்கு துணை சேராத என்ன !

தூரக் காற்று உயிரைக் காப்பாற்றாதா என்ன !
நீ என்னை விட்டி தூரத்தில் உள்ளாய்
என் உயிரைக் காக்க வருவாய் !

தேடுகிறேன்
என் பார்வை உயிரைத் தாண்டி
என் கற்பனையை பாதையாக்கி தேடுகிறேன் !
மனம் தளர்ச்சி அடையாமல் !.............

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (28-Jan-14, 3:29 pm)
Tanglish : thedal aadavan
பார்வை : 55

மேலே